Life changing comments

 Thank you, Shah, for sharing the powerful thought that one skill can create magic in personal, financial, and every area of life.

Today’s I was truly extraordinary, and I am confident it will bring a tremendous positive change in my life.

I’ve learned the value of admitting mistakes, standing by others, and making people feel important through genuine listening and appreciation. The reminder to focus on actions rather than labeling people, and to avoid criticism, complaints, or condemnation, is something I will carry forward.

வாழ்க்கை தத்துவம் பகுதி -2 | life Quotes Part -2



1.
தேவை இல்லாததை 
வாங்கக் கூடாது,
அவசியம் 
இல்லாததைப்
பேசக் கூடாது,
அழையாத வீட்டிற்கு
போகக் கூடாது.



2.
எளியோரை வலியோர்
அடித்தால், அந்த 
வலியோரை தெய்வம்
ஒரு நாள் அடிக்கும்....!
மீண்டு எழுந்து வர 
முடியாத அளவிற்கு...!



3.
எப்போதும்
உன்னுடைய 
பலம், அறிவை
மட்டும் நம்பி
ஒரு செயலை
செய், பிறரை
நம்பி எதையும்
செய்யாதே....!



4.
தீயவர்களுடன் 
இருப்பதை விட
தனிமையில் 
இருப்பது நல்லது,
தீமை தரும்
சொற்களை 
பேசுவதை விட
மெளனம் சிறந்தது.



5.
மனிதனின்
ஆசைகள் 
ஒரு போதும்
முழுமையாக 
நிறைவேறாதது,
மேலும் மேலும்
பெற வேண்டும்
என்று திரிந்து
கொண்டு தான்
இருக்கும்...!
 


6.
பிறருக்கு நல்லது 
விளைவிக்கும்
செயல்களை செய்,
தீமை விளைவிக்கும்
செயல்களை கனவிலும்
நினைத்துப் பார்க்காதே...!



7.
தன்னையே
பெருமையாக
நினைப்பவன்
தன்னையே
ஏமாற்றிக்
கொள்கிறான்...!



8.
சுயநல
மனிதர்களுக்கு
சொந்த பந்தமே
இருக்க மாட்டார்கள்...!



9.
கோபத்தோடு
சென்றால்
நஷ்டத்தொடு தான்
வர வேண்டும்.
கோபத்தினால்
போனது சிரித்தால்
மட்டும் வராது...!



10.
இளமையில் 
துணிச்சல் வேண்டும்,
முதுமையில்
நிதானம் வேண்டும்.
வாழ்வதில் தான்
இன்பம்,
உழைப்பதில் தான்
வாழ்வு...!



11.
ஆசைகள்
குறைந்தால்
அமைதி பெருகும்,
ஆணவம் 
முன்னாள் போனால்
அவமானம் 
பின்னால் வரும்...!



12.
உன் துன்பத்தை
யாரிடமும்
சொல்லி ஆறுதல்
தேடாதே...!
அவர்கள் தரும்
ஆறுதலை விட
அவர்கள் அடையும்
ஆனந்தமே அதிகம்.



13.
உழைப்பு
உயர்வு தரும்,
நல்ல எண்ணம்
நன்மையைத் தரும்,
ஒழுக்கம் 
பெருமையை தரும்.



14.
தவறு
செய்யும் முன்
மனசாட்சியே
உங்களை ஒரு முறை
எச்சரிக்கை செய்யும்,
அதை மீறி செய்த 
பிறகு மனசாட்சியே 
நீதிபதியாக இருந்து
உங்களை தண்டிக்கும்...!




15.
பணத்தை விட
அறிவே 
உயர்ந்தது...!
அறிவை விட
ஒழுக்கமே
சிறந்தது...!



16.
கடன் 
கொடுத்து
கேட்பதற்கு
பதிலாக
தானமே 
கொடுத்து
விடலாம்...!



17.
குறைவாகப் 
பேசு...
இனிமையாகப் 
பேசு...
உண்மையே 
பேசு...



18.
சந்தர்ப்பம் 
வரும்போது 
அதனை 
பயன்படுத்திக் 
கொள்ள தயாராக 
இருப்பதே 
வெற்றிக்கு
அடிப்படை...!



19.
பையில் இருக்கும்
பணம்,
பக்கத்தில் இருக்கும்
மனைவி,
வளர்க்கும் நாய்
இவற்றை மட்டும்
நம்ப வேண்டும்...!




20.
கடன் 
இல்லாதவனே
பணக்காரன்,
உடல்
ஆரோக்கியம்
உள்ளவனே
செல்வந்தன்...!



21.
தன்னுடைய 
வருமானம்,
வியாதி,
கடன்
இவற்றை
யாரிடமும்
சொல்லக்கூடாது...!



22.
மனிதனுக்கு
தேவை
அன்புள்ள
இதயமும்
அமைதியான
மனமும்...!



23.
மன நிறைவு 
என்பது
இயற்கையாகவே 
நம்மிடம்
உள்ள செல்வம்.
ஆடம்பரம்
என்பது நாமே
தேடிக்கொள்ளும்
வறுமை.
எளிமையே 
வாழ்க்கைக்குத் 
துணை புரியும்.



24.
நண்பனை அவன் 
இல்லாதபோது மனம் 
நிறைந்து புகழ வேண்டும்.
ஆசிரியரை 
எல்லா இடங்களிலும் 
புகழ வேண்டும்.
பிள்ளைகளை மனதில்
வைத்து புகழ வேண்டும்.
மனைவியைக் கூடி வாழும் 
நேரத்தில் புகழ வேண்டும்.
தொழிலாளியை வேலை
முடித்த பின்னர் புகழ வேண்டும்.



25.
ஒரு மனிதனுக்கு
உண்மை தான் தாய்,
அறிவு தான் தகப்பன்,
தர்மம் தான்
கூடப் பிறந்தவன்,
தயவு தான் நண்பன்,
அடக்கம் தான் மனைவி,
பொறுமை தான் மகன்,
இவர்களே உறவினர்கள்.



26.
வாழ்க்கைக்கு மிகத்
தேவையானது 
பணம்தான்.
அதை நல்ல வழியில்
உழைத்து சம்பாதிக்க 
வேண்டும். பிறரை
ஏமாற்றிப் பெறும்
பணம் நிலைக்காது...!



27.
மன அமைதி,
ஆனந்தம் இவை
பணத்தால் 
கிடைக்காது...!
அன்பு, கடவுள் அருள்,
தியாகம் போன்றவை
இருந்தால் தான் 
கிடைக்கும்....!

கவிதைகள் தொகுப்பு -1 | Tamil kavithai


1.
நம்மை கேவலமாக 
நினைப்பவர்கள்
நம்மை விட 
கேவலமானவர்களாக
இருப்பார்கள்....! 


2.
தீராத கோபம் யாருக்குத் 
தான் இங்கு இலாபம்...? 
தீராத பகை வைத்துள்ள 
உள்ளத்தில் துயரங்கள் 
மட்டுமே வளர்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கும் துன்ப
இல்லமாக மாறிவிடும்...!

 

3.
எனக்கு மட்டும் 
ஏன் இப்படி நடக்குது 
என்று கேள்வி கேட்கும்
பொழுது நினைத்துக் கொள்
நீ செய்த பாவத்திற்கான 
தண்டனை தான் என்று...!



4.
தவறுகளை 
அப்பொழுதே
சரி செய்து விடுங்கள்
இல்லையென்றால்
அதன் விளைவுகள்
தொடர்ந்து வரும்...!



5.
அரசு கட்டிடங்களை
ஒப்பந்தம் செய்து தொழில் 
செய்யும் சில பெரிய
முதலாளிகளை எல்லாம்
பெரிய பெரிய திருட்டு
முதலைகள், அவர்களை 
பெரிய பெரிய பகல்
கொள்ளையர்கள் என்றும் 
அழைக்கலாம்... மற்றும்
அவர்களுக்கு உடந்தையாக
இருக்கும் அரசு அதிகாரிகளை
பிச்சை எடுக்கும் நரிகள் 
என்றும் சொல்லலாம்..! 



6.
தொழிலாளியின் 
உழைப்பை ஏமாற்றி
பிச்சை எடுத்து 
பணக்காரன் ஆகிறான்
சில கேடு கெட்ட 
முதலாளிகள்...!



7.
வெள்ளை சட்டைபோட்டுக் 
கொண்டு வேலை வாங்கி கொண்டிருக்கும் சில முதலாளிகள்
எல்லாம் பெரிய புடுங்கிகள் தான்
அவர்கள் தொழிலாளியின்
உழைப்பைப் பெற்றுக் கொண்டு
ஊதியம் தராத பெரிய புடிங்கிகள், இரத்தம் உரியும் அட்டைகள் தான்...! 



8.
உண்மையில் சில
பெரிய மனிதர்கள் யாரும்
பெரிய மனிதர்களைப் போல
நடந்துக் கொள்வதில்லை....!
அவன் பெரிய மனிதனைப் போல நடித்துக் கொண்டிருக்கிறான்...!



9.
நம்பிக்கை துரோகமும்
ஏமாற்றமும் ஒரு மனிதனை
மிருகமாக மாற்றுகிறது....!
அவன் மனம் அவர்களையும்
பிறரையும் என்றும் நம்ப 
மறுக்கிறது, மனதில் கெட்ட 
எண்ணத்தை தூண்டுகிறது...!
அதுவே அவன் வாழ்கையும்
அவனைச் சார்ந்தவர்களின்
வாழ்க்கையும் சீரழிய காரணமாக
அமைந்து விடுகிறது...! 



10.
தொழிலாளியை 
உயர்த்தி விடும்
முதலாளிகள் இருக்கும் 
இடத்திலே தான் 
உழைப்பை 
திருடும் கேடு கெட்ட 
பல முதலாளிகளும் இருக்கிறார்கள்...!



11.
உழைப்பை பெற்றுக் கொண்டு
ஊதியத்தை தராமல் இழுக்கடிக்கும் 
நிறுவனங்களும், முதலாளிகளும் ஏராளமாக இருப்பதால் வேலைக்குச்
செல்பவர்கள் கவனமாக நடந்து
கொள்ள வேண்டும்....!



12.
முதலைகள் ஜாக்கிறதை
என்பதைப் போல இந்த
கால கட்டத்தில் முதலாளிகள்
ஜாக்கிரதை என்று ஆகிவிட்டது.



13.
நாம் செய்த 
பாவத்திற்கான 
தண்டனையை 
துன்பமாகவும்,
புண்ணியத்திற்கான
நன்மையை 
இன்பமாகவும்
அனுபவிக்கிறோம்...!



14.
நம் மனம் 
நினைத்தால்
முடியாதது என்று 
இந்த உலகில்
எதுவுமே இல்லை...!



15.
மனிதன் தன் 
தவறுகளை சரி
செய்யாமல் அதை
அங்கே அப்படியே
விட்டு செல்கிறான்.
அது அவன் வாழ்நாளில்
தொடர்ந்து கொண்டே
அடுத்த பிறவியிலும்
தொடர்ந்து அவனை
துன்பப்படுத்துகிறது...!



16.
ஒரு பெண்ணால்
தன் மனதிற்கு 
பிடித்த ஆணை
எளிதில் தூக்கி
எறியவோ, அவனை
மறக்கவோ முடியாது...!



17.
மனித வாழ்வில்
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
ஏராளமாக 
நிறைந்து உள்ளது.
அனைத்தையும் தாண்டி 
ஒரு நாள் வாழ்க்கையில் 
மாற்றம் உண்டாகும் என்ற 
தன்னம்பிக்கையில் 
வாழ்க்கையை கடந்து
செல்ல வைக்கிறது..! 



18.
உறவுகளால் 
காயம் பட்ட மனது
மீண்டும் எந்த
உறவுகளையும் சார்ந்து 
வாழ்வதில்லை...! 



19.
மற்றவர்களை கேள்வி
கேட்கும் முன் தன் 
மனசாட்சியிடம் 
உங்களைப் பற்றி கேள்வி 
கேளுங்கள் அது சொல்லும் 
உங்களைப் பற்றி...!



20.
எந்த ஒரு 
மனிதனின்
வார்த்தைகளையும் 
முழுமையாக 
நம்பி விடக்கூடாது....! 



21.
எதிரியாக ஆனாலும்
செய்த உதவியை
மறந்து விடாதே....!



22.
கடைசியாக ஒரு முறை
விட்டு கொடுத்து
பேசி இருந்தாலே
பல உறவுகள் முடிவுக்கு
வந்திருக்காது....! 



23.
உனது தேவை
முடிந்த பின் 
உன்னை யாரும்
தேடுவதில்லை,
நீயும் அவர்களுக்கு
தேவை படுவதில்லை...!



24.
சொல்லி காட்டும்
அளவிற்கு யாரிடமும்
எதையும் பெற்று
விடாதே... என்றாவது
ஒரு நாள் சொல்லி
காட்டி விடுவார்கள்...!



25.
பாவப் பிறவியா...?
இல்லை....
பாவம் செய்வதற்கான
பிறவியா....?
இல்லை....
பாவப்படும் பிறவியா...?
இல்லை.... 
பாவம் செய்து
பரிகாரம் தேடுவதற்கான  
பிறவியா...?
இந்த மனித பிறவி....!



26.
அன்பை காட்டினாலும்
அதில் சுயநலம் இல்லாத
அன்பை செலுத்துங்கள்..!



27.
உறவுகளால் தனித்து 
விடப்பட்டவர்களுக்குத் 
தனிமை சொந்தமாகிறது...!
 


28.
தனிமையில் 
கைவிடப்படும் பொழுதே
தன்னம்பிக்கை 
பிறக்கிறது துணிந்து வாழ...!




29.
காயம்பட்ட மனமே
எல்லோரையும்
ஒதுக்கி விட்டு 
தனிமையில் நிற்கிறது...!



30.
அவள் பேச்சை 
நிறுத்தினால்
என் மூச்சை நிறுத்தும்
இந்த காதல்...!



31.
சில வார்த்தைகள்
உயிரையும் கொடுக்கும்,
சில வார்த்தைகள்
உயிரையும் எடுக்கும்...!



32.
எல்லோரும்
ஒரு வகையில்
ஏமாளி தான்...!



33.
வருமானத்திற்கு வழி 
இருந்தாலே இந்த
நாட்டின் வறுமை 
எல்லாம் ஒழியும்...!



34.
வாழ்ந்து 
காட்ட வேண்டும் 
என்ற எண்ணமும் 
அவர்கள் முன் வளர்ந்து
காட்ட வேண்டும் என்ற
எண்ணமும் நிச்சயமாக
நம்மை வாழ வைக்கும்...!




35.
வறுமை ஒரு மனிதனை
வெறுமையாக்குகிறது...
அவனின் அனைத்து
உணர்வுகளையும்
கொன்று விடுகிறது...
பல கொடுமைகளையும்
செய்ய வைக்கிறது, 
பல காரணங்களை 
சொல்லி அவனை வாழ 
வழியில்லாமல் 
கொடுமைபடுத்தி சாகடிக்கிறது...!




36.
போராடினால் தான் 
வெற்றி பெற முடியும்.
ஒரு போதும் மனம்
தளர்ந்து விடாதே...!




37.
பல சமூக பிரச்சினைகளுக்கு
கேள்வி கேட்க ஆளே இல்லை,
அப்படி கேள்வி கேட்டு விட்டால்
கேள்வி கேட்ட ஆளும் இல்லை...!



38.
சில கேள்விகளுக்கு
விடையே இல்லை ...!
தெரிந்தும் கேள்வி 
கேட்பதில்லை...
தெரிந்து கொள்ளவும்
கேள்வி கேட்பதில்லை...
கேட்பதற்கும் சில நேரம் 
பதிலே கிடைப்பதில்லை...




39.
சில கேள்விக்கு
பதில்சொல்வது  இல்லை...
சில பதிலுக்கு
கேள்வியே கேட்பது இல்லை...




40.
பதிலும் சில நேரம் 
கேள்வியாக இருக்கிறது.
கேள்வி கேட்க நீ யார் என்று 
பதில் கேள்வி கேட்பது போல...!




41.
தோல்வின் வலிகளை 
பொறுத்துக்கொண்டு
கடந்தால் தான் நிலையான
வெற்றியின் மகிழ்ச்சியை
ருசிக்க முடியும்....!
 



42.
வேதனைகளை 
தாங்கிக்கொள் அவை 
சாதனைகளின் வேர்கள்...



43.
பல தோல்விகளால்
ஆழமாக வேர் ஊன்றி 
நிற்கும் மரம் தான் 
வெற்றி...! 




44.
உன் வாழ்க்கை உன் கையில்... 
பிறர் யாரும் காரணம் இல்லை
உன் மாற்றத்திற்கும், நீ 
மாறாமலிருப்பதற்கும் 
நீயே காரணம்...! 




45.
இழந்தவன் ஒரு நாள்
அதைப் பெற்றுவிடுவான்.
பெற்றுக்கொண்டவன்
ஒரு நாள் அதை
இழந்து விடுவான்.
இது தான் இயற்கை...!




46.
பிறருக்கு நல்லது
செய்து கொண்டிருந்தாலும்,
கெடுதல் செய்து 
கொண்டிருந்தாலும் 
உன் நிலை என்றும் மாறிவிடாது,
இருந்த நிலையை விட இன்னும்
கீழெ தான் செல்வாய்....!
உன்னை நீயே உயர்வதற்கு
வழி செய்துகொள்...!

 


47.
ஒருவர் இல்லாத இடத்தை
நிரப்ப வேறு ஒருவர் நிச்சயம்
காத்துக் கொண்டிருக்கிறார்...!




48.
மனசாட்சிக்கு எதிராக 
பொய் சொல்பவன்....
நிம்மதி இல்லாமல்
நரக வேதனை அடைந்து
துன்பப்படுவான்....!




49.
உன்னால் யாரையும் 
எப்போதும் மாற்ற முடியாது.
அதை நினைத்து
வருந்தாதே....
யாரையும் யாராலும்
மாற்ற முடியாது.
அவர்கள் நினைத்தால் 
மட்டும் தான் மாற முடியும்.



50.
வாழ்கையில் இழந்த
நாட்களை நினைத்துப்
பார்க்கும் பொழுது தான்
தெரிகிறது, தன்னுடைய
நலனுக்காவது 
கொஞ்சம் சுய நலமாக 
இருந்திருக்கலாம் என்று...



51.
எவ்வளவோ கஷ்டம் வந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்க கூட இருந்தாலே போதும் 
கஷ்டம் காணாம போய்டும்....!



52.
உலகத்திற்கு 
போலியாக 
வாழ்வதை விட,
தனக்காகவும் தன் 
மகிழ்சிக்காகவும் 
வாழ்ந்தாலே போதும்...!



53.
வாழ்கையில் தவறு செய்யாத
மனிதனே இல்லை... ஆனால்
வாழ்க்கை முழுவதும் தவறு
செய்பவன் மனிதனே இல்லை..!



54.
உலகில் எதுவும் நம்மை
அடிமையாக்குவதில்லை.
நாம் ஒன்றின் மீது வைத்துள்ள
ஆசை தான் நம்மை
அடிமையாக்குகிறது.....!



55.
ஒரு உண்மை வெளியே 
தெரிய வரும் போது
எல்லாமே பொய் என்று 
தெரிந்து விடுகிறது...!



56.
பிறருக்கு நன்மை
செய்வது என்பது
உனக்கு நீயே நன்மை
செய்துக் கொள்கிறாய்
என்று தான் அர்த்தம்....!




57.
உடைகளிலும் 
உணவிலும் உள்ள
வறுமை ஒழிந்து
போகும் காலம்
எப்போது தான் வருமோ 
இந்த நாட்டில்...!




58.
இங்கு எல்லாம் 
தானாகவே மாறும்....!
எதுவும் நம் 
கையில் இல்லை....!
மகிழ்ச்சியை விட்டு கொடு,
கவலையை விட்டு விடு....!




59.
நினைத்ததை
எதை வேண்டுமானாலும்
கற்றுக் கொள்ளலாம்
புத்தக நண்பர்களிடம்...!



60.
வெளிநாட்டு பயணம்...!
கஷ்டத்தை நெஞ்சுக்குள்
சுமந்துக்கொண்டு
கனவுகளை கட்டிக்கொண்டு 
கடல் தாண்டி பறக்கின்றான் 
மனிதன்... வெளிநாட்டு 
பறவைகளாக
வாழ்க்கையில் கரை சேர....!




61.
நிறைவேறாத ஆசைகள்,
ஏக்கங்கள் எப்போதும்
வலிகளைத் தான் தருகிறது...!
 


62.
உறவுகளை வளர்க்கும் போது
சில நேரங்களில் தேவையற்ற
களைகளையும் வெட்டி விட
வேண்டியதாக இருக்கிறது....! 



63.
சிறு சிறு காரணங்களுக்கும்
சிறு சிறு பிழைகளுக்கும் தான்
நம் மனம் அதிகமாக 
நொந்துக் கொ(ல்)ள்கிறது...!



64.
நம்மை மறந்தும் கூட 
நினைவுகள் என்றும்
அவர்களை மறந்து 
போவது இல்லை...!



65.
பிரிக்க முடியாத 
காதலைக் கூட 
பிரிவுகள் பிரித்துப் 
பார்க்கிறது...!



66.
என் கண்ணீர் உனக்கு
மகிழ்ச்சி தரும் என்றால்
கண்ணீர் விடவும் நான்
தயாராக இருக்கிறேன்....!



67.
சிறிய பிழைகள் தான்
பெரிய தவறுகளாகின்றன...!



68.
சிறிய விஷயங்களில் நாம்
எப்போதும் கவனமாகவே 
இருப்போம்....!



69.
மகிழ்ச்சிக்காகவே
பணம்
சம்பாதிக்கிறோம்,
பணம் 
சம்பாதிக்கவே
மகிழ்ச்சியை 
தொலைக்கிறோம்...!



70.
ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப்
பின்னாலும் பல தியாகங்கள் 
மறைந்துள்ளது...!



71.
உணர்வுகளால் 
உருவாக்கப்பட்டவன் 
தான் மனிதன்,
துரோகத்தால் பாதிக்கப் 
பட்டதால் தான் சிலர் 
உணர்வில்லாமல் 
வாழ்கிறார்கள்...!



72.
உண்மையில் உயிராக 
நேசித்தவர்கள் தான்
இன்று தனிமையில் 
வாழ்கின்றவர்கள்...!




73.
மோசமானவற்றிலிருந்து 
தான் நல்லவற்றைத் தேடித் 
தெரிந்துக் கொள்கிறோம்....!
 



74.
புத்தகம் படித்தவர்கள்
எல்லாம் புத்திசாலிகள்
ஆகிவிடுவதில்லை....!
உண்மையில்
படித்தவற்றை வைத்து
புத்தியைப் பயன் 
படுத்தியவர்கள் தான்
புத்திசாலிகள்....!




75.
வாழ்க்கை எத்தனை
சுமையாய் இருந்தாலும்
உன்னுடன் வாழ்ந்தது
அளவுகடந்த
இனிமையே....!
மரணம் எத்தனை 
இலகுவாய் இருந்தாலும்
உன் மரணம், நீ என்னுடன்
இல்லாதது பெரும்
கொடுமையே....!




76.
நம் வாழ்க்கையில் யார் 
இருக்க வேண்டும், யார்
இருக்கக் கூடாது என்பதை
நாம் தான் தீர்மானிக்க 
வேண்டும்...தக்க வைத்துக்
கொள்வதற்காக யாரையும்
தாங்கிப் பிடித்து நிற்க கூடாது...!




77.
நாம் நேசம் வைத்த 
நெஞ்சங்களை 
கல்லறையில்
புதைக்கப் பட்டாலும்
அவர்களைப் பற்றிய
ஒவ்வொரு நினைவுகளும்
நம் இதயத்தில் 
உயிருடன் வாழ்ந்து
கொண்டு தான்
இருக்கிறது...!




78.
கிடைத்ததை 
அனுபவிக்கக் 
கற்றுக்கொள்...!
கிடைக்காததை 
ரசிக்கக் கற்றுக்கொள்...!



79.
முதல் முறை ஏமாறுவது
தவறில்லை ஏமாற்றுவது
தான் தவறு... ஆனால்
இரண்டாம் முறை
இரண்டுமே தவறு...!




80.
வாழ்க்கைப் பயணத்தில்
துன்பங்களும் துயரங்களும் 
மனதைக் கசக்கிப் 
பிழியும் பொழுதெல்லாம்
தன்னம்பிக்கையும்
விடா முயற்சியுமே மனதிற்கு உறுதுணையாக வழி காட்டுகிறது...!




81.
பெண்ணை அடைய 
ஒரு ஆண் எடுக்கும் 
முயற்சியை, தொழிலில் 
காட்டினால் வாழ்வில் 
வெற்றி பெற்று 
பணக்காரனாக மாறலாம். 
அதன் பிறகு பல 
பெண்கள் வரிசையில்
காத்துக் கொண்டிருப்பர்.




82.
மற்றவர்களுக்கு
உதவி செய்வதன் மூலம்
அவர்களையும்
மகிழ்ச்சியடையச்
செய்யலாம், நாமும்
மகிழ்ச்சியடையலாம்..!



83.
ஒரு நாள் சாகப்
போகிறோம் என்று 
தெரியும் அதற்காக 
வாழ்க்கையை 
வாழாமல்  இருக்க 
முடியுமா என்ன...?




84.
உன் மனதைக் 
காயப்படுத்துபவரை
விட்டு விலகி விடு,
தனிமை உன்னைக் 
காயப்படுத்தாது....!
  



85.
நினைப்பதை 
பெறுவது தான் 
வெற்றி... எனவே
எத்தனை முறை
தோல்வி உன்னை
இழுத்து பிடித்தாலும்
தோல்வியை உதறி
விட்டு வெற்றியை
நோக்கி ஓடு...!




86.
ஆசைப்பட்டதை அடைந்தால்
இன்பம் வருவது போல 
அதை அடையும் முன்
துன்பமும் தான் சேர்ந்து வரும்... 
துன்பம் வேண்டாம்
இன்பம் மட்டும் போதும்
என்றால் எதுவும் 
கிடைக்காது...!
ஏனெனில் ஒன்றில் தான்
மற்றொன்று உள்ளது....!




87.
முடியும், முடியாது
இரண்டும் நிஜம் தான்...
ஆனால், நாம் இரண்டில் 
எதை நினைத்துச்
செய்கிறோமோ
அது தான் நடக்கும்,
அது தான் கிடைக்கும்...!




88.
மன்னிப்பதும் 
மறப்பதும்
மன்னிப்புக் 
கேட்பதும்
சிறந்த பண்பு...! 




89.
நேசிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும்
செய்வார்கள் நம் மீது
உண்மையான நேசம்
கொண்டவர்கள்
நமக்காக என்ன 
வேண்டுமென்றாலும் செய்ய 
துணிந்து விடுவார்கள்....!




90.
இரண்டாவது வாய்ப்பு
வாழ்க்கையில் இல்லை
என்பதால் தான் 
இழக்க மனம் இல்லாமல்
இறுக்கிப் பிடித்துக் 
கொள்கிறேன்....!



91.
மீண்டும் மீண்டும் 
கேட்கத் தோன்றும்
உன் குரல் காற்றில்
கரைந்துவிடக் கூடாது
என்பதற்காகத் தான்
கைபேசியில் பதிவு
செய்து கேட்கிறேன்
உன் குரலின் ஓசையை...!




92.
காத்திருந்ததும் 
காத்திருப்பதும்
காத்திருக்கப் போவதும்
உன் அன்பிற்காகத் தான்...!
 



93.
பத்திரப் படுத்திக்
கொள்வதற்காகத் தான்
காதலை கடிதத்தில்
அனுப்பியுள்ளேன்...!



94.
மறந்து விட்டதாகத் தான்
நினைக்கிறோம் முதல்
காதலை....!



95.
பேசாமல் தான் 
இருக்கிறோம் இருந்தும் 
உள்ளத்தில் மனம்
பேசிக்கொண்டு தான் 
இருக்கிறது
நினைவுகளுடன்...!



96.
ஒரு காலத்தில் நன்றாக
குடும்பத்தை தூக்கி 
ஓடிக்கொண்டிருந்த
குதிரை தான் இன்று
வலுவிழந்து படுத்திருக்கிறது,
படுக்கையில் அப்பா...!




97.
ஒருவரை தண்டிக்க
நினைத்தால் அன்பால்
தண்டித்து, 
அவர் மனதில் நம் 
நன்மைக்கு தான் என்று 
உணரச்செய்து அவரை
திருத்த முயற்சி செய்...!




98.
ஒருவர் மட்டும் 
வெற்றி 
பெறுவதை விட 
ஒருவர் மட்டும் 
தோல்வி 
பெறுவதை விட,
சமாதானத்தில் 
நாம் இருவருமே 
வெற்றி பெறலாம்..!



99.
நீ எதிர் பார்த்திருந்த
நேரம் இன்னும்
வரவில்லையே
என்பதற்காக 
கடிகாரத்தை
கோபித்துக் கொண்டு
என்ன பயன்...?



100.
ஒருவர் மீது ஒருவர்
அன்பைப் பொழியாமல்
சில சமயத்தில்
மனிதர்களில் சிலர்
ஒருவர் மீது ஒருவர்
கடுமையான 
வார்த்தைகளைப் பொழிந்து
மனதைக் காயப்படுத்திக்
கொள்கிறார்கள்....!
 



101.
வாழும் நாட்களில்
மகிழ்ச்சியையும்
மன அமைதியையும்
தேடுங்கள்.....
ஏனென்றால் மனிதனின்
வாழ்நாள் தேவைகள்
ஒரு போதும் தீர்ந்து விட 
போவது இல்லை....!




102.
காரணங்களுக்காகவோ
தேவைகளுக்காகவோ
வருவதில்லை ஒருவர்
மீதான அன்பு....
இன்பமோ துன்பமோ
நமக்காக நம்மோடு
இறுதிவரை இருப்பார்கள்
என்கிற நம்பிக்கையில்
வருவதே உண்மையான
அன்பு....!




103.
முள் விதைக்கும்
சிந்தனை வேண்டாம்,
முன்னேற வைக்கும்
சிந்தனைக் கனவுகள்
வேண்டும்....!
பகமை பூக்கும்
நெஞ்சம் வேண்டாம்,
பாசம் பொழியும் நேர்மை
நெஞ்சம் வேண்டும்...!




104.
நேர்மையுள்ள 
நெஞ்சம்
பயம் அறியாது...!
குற்றமுள்ள 
நெஞ்சம் தான்
பயம் கொள்ளும்...!




105.
மனித மனம்
நிலை இல்லாதது,
எண்ணிலடங்கா
எண்ணங்கள் நிறைந்தது...
அதை புரிந்து கொள்ள 
முயற்சி செய்தால்
வெறுமை மட்டுமே மிஞ்சும்...!




106.
பல்லாண்டு 
பயின்று பட்டம் 
வாங்கியாச்சு
என்றாலும்... 
வாழ்க்கைப் 
புத்தகத்தை
என்னால் வாசிக்க
முடியவில்லை...!




107.
இன்றைய காலத்தில்
மனிதன் இயந்திரமாக
வாழ்கிறான், நேசிக்க
நேரமில்லாமல்...!



108.
உன்னை 
வெறுப்பவருக்காக
மனம் வருந்தாதே,
உன்னை நேசிக்க
ஆயிரம் பேர்
இருக்கிறார்கள்...
வெறுப்பவரின்
வட்டத்தை விட்டு 
வெளியே வந்துப்பார் 
அப்போது தெரியும் 
உன்னை நேசிப்பவர்களை...!
 



109.
ரசித்துக்கொண்டு
இருக்கும் வரை
மகிழ்ச்சியாக 
இருப்பாய்....
அதை அடைய 
நினைக்கும் பொழுதே
நீ துன்பத்தை 
அனுபவிக்க
தொடங்குகிறாய்...!




110.
எந்த அளவுக்கு
மகிழ்ச்சியாக 
இருக்கிறோமே
அந்த அளவுக்கு
துன்பத்தையும்
அனுபவிக்க 
இருக்கிறோம்...!




111.
மனிதனின் முந்தைய
ஆசைகளும் 
செயல்களும் தான்
தற்போதைய 
நிலைக்கு காரணம்...!



112.
நல்லவன் எப்போதும் 
நல்லவனாக இருந்தது
இல்லை....
தீயவன் எப்போதும்
தீயவனாக இருந்தது
இல்லை....



113.
பிள்ளைகளைத்
திட்டாதீர்கள்...
அவர்களின்
பிழைகளைத்
திருத்த முயற்சி
செய்யுங்கள்...!



114.
கடவுளுக்கு
சாதி பெயர் இல்லை,
அதை வழிபடும் 
மனிதன் மட்டும் ஏன்
சாதியைப் பெயராக
கொண்டுள்ளான்...?
எனக்கு தெரிந்த 
வரையில் மனித
எண்ணத்தில் தான்
ஜாதிப் பிறக்கிறது....
ஆகையால் ஜாதி
வெறி கொண்டவர்கள்
நிச்சயம் மன 
நோயாளியாகத் தான் 
இருக்க வேண்டும்...!




115.
செயல்களிலும்
மொழிகளிலும்
எழுத்துக்களிலும்
சாதிகள் பரவுவது
இல்லை... அவன்
பிள்ளைக்கு கற்றுத்
தரும் வழியில் தான்
பரவுகிறது.... 
பரம்பரை நோயாக...!




116.
உடம்பில் ஓடுகிற
செந்நீரிலும்
கன்னத்தில் வழிகிற 
வெந்நீரிலும்
சாதிகள் தெரிவது
உண்டா...?
எல்லோரும் உணர்வுள்ள 
மனிதர்கள் தானே...!




117.
கண்ணுக்கே தெரியாத
சாதியை பெரிதாக 
பேசும் சில அற்பர்கள்
கண்ணுக்கு தெரிந்து
சாதித்தவர்களை ஏன்
பெரிதாகப் பேச 
மறந்து விடுகிறார்கள்.




118.
சிரிப்பு என்ற 
மாமருந்து
உன்னிடம் 
இருந்தால்
கவலை என்ற 
நோய்
உன்னை வந்துக் 
கொல்லாது....!




119.
விரல்களை 
வெட்டாமல்
நகங்களை மட்டும்
வெட்டுவது போல
உறவுகளை வெட்டி
விடாமல் அவரிடம்
உள்ள குறைகளை
மட்டும் களைந்து 
விடுங்கள்....!




120.
பொருளை
புகழ்ந்து பேசுகிறவன்,
அதை விற்க 
நினைக்கிறான்...!
குறைத்து பேசுகிறவன்.
அதை வாங்க
நினைக்கிறான்...!




121.
அழ வைத்து 
வேடிக்கை 
பார்க்கிறான்,
சிரிக்க வைத்து
ரசித்து பார்க்கிறான்,
கடவுளின் கையில்
நாம் விளையாட்டு
பொம்மைகள் தானே..!




122.
இடையில் வந்து
கானாமல் போகும்
கள்ளக் காதலுக்காக..
கட்டிய கணவனை 
கழட்டி விட்டுச் செல்லாதே,
ஆயிரம் தவறு 
செய்தாலும், இறந்த 
பின் அவளை தூக்கிச் 
செல்லும் போதும் அவன்
மனைவி என்று தான்
பெயர் வரும்...!




123.
தவறு சொல்ல முடியாது
பிழைக்கப் பணம் 
இல்லாததால்
விலைக்குப் போன 
பெண்களும் உண்டு,
பணம் இல்லாததால்
பிழைக்க வழி தேடிச் 
சென்ற பெண்களும்
உண்டு.... 
இங்கு காலத்தின் 
கட்டாயத்தின் காரணமாகத் 
தான் தவறுகள் நடக்கிறது...!




124.
இங்கு யாரும்
இராமன் இல்லை
என்றால் சீதையும்
இல்லை என்று 
தானே அர்த்தம்...!




125.
அன்பு, நன்றி,
கருணை,
மனிதநேயம்
இவையெல்லாம்
நல்ல உள்ளத்தில்
மட்டும் தான் 
விளையும்....! 




126.
ஆசைப்பட்டு
பெற்றதை 
எல்லாம் 
கோபப்பட்டு
இழந்து 
விடுகிறோம்...!




127.
இனிமையாகவும்
இதயத்தை மயக்கும்
வகையிலும் பேசக்
கூடியவர்களை விட
நமக்கு நல்லது
செய்யக்கூடியவர்களை,
தவறு செய்தால் 
கண்டித்து திருத்தக்
கூடியவர்களை 
நண்பர்களாக 
அடைய வேண்டும்...!




128.
ஆண்பால்
பெண்பால்
இரண்டும்
பொதுவானது
நட்பால்...!




129.
கொடுத்த 
அத்தனையும்
அவனே எடுத்துக் 
கொள்கிறான்,
இங்கு எதுவும்
நம்முடையது என்று
சொந்தம் கொள்ள
ஒன்றும் இல்லை...!




130.
தவறுகளைத்
தண்டிப்பதற்கு 
இங்கு எந்த
மனிதனுக்கும்
தகுதி இல்லை...!




131.
வாழ்க்கையில் தேடுவதும்
தொலைப்பதுமாகவே
இருக்கிறது உறவுகளை....!



132.
அளவுக்கு அதிகமாக
நேசிக்க வைப்பதும் 
அளவுக்கு அதிகமாக
வெறுக்கச் செய்ய
வைப்பதும் தான் 
அன்பின் வேலை....!



133.
உங்களுடைய
ஆர்வத்தைப் 
பொறுத்தே
உங்களின் வெற்றி 
நிர்ணயிக்கப்படுகிறது.




134.
வேதங்கள் மதங்களை
வளர்த்தது போதும் 
இனிமேலாவது
நல்ல மனிதர்களை
உருவாக்கட்டும்...!
 


135.
காலங்கள் ஒரு 
நாள் பொய்களை
காட்டிக் கொடுக்கும்,
உண்மைகளை
வெளியே கொண்டு 
வந்து சேர்த்து நீதியை 
நிலை நிறுத்தி விடும்...!



136.
கிடைக்கும் இடம்
தெரிந்தும் 
நம்மால் விலைக்கு
வாங்க முடியாதது
அன்பு ஒன்றே...!
எவ்வளவு பெற்றாலும்
திரும்ப கொடுக்க 
முடியாதது... அன்பு...!




137.
அன்பை தேடிச் செல்லாதே 
என்று தெரிந்தும்,
எத்தனை முறை
அடிபட்டு வந்தாலும்
புரிவதே இல்லை
வாயை மூடிக் கொண்டு
அழும் இந்த மனதிற்கு...!




138.
ஒருவன் தன்
தேவைக்கு மேலே
எடுத்துக் 
கொள்ளாவிட்டால் 
எல்லோருக்கும்
வேண்டியவை 
கிடைத்து விடும்...!



139.
வாழ்க்கைப் 
போராட்டத்தின்
கடைசியில் உயிரை
இறுக்கிப் பிடித்துக்
கொண்டிருக்கும்
உதிரப் போகும்
அந்த முதிர்ந்த
மனங்களுக்கு நாம்
ஆறுதலாக துணை
நிற்போம்...!




140.
தேவைக்காகத் தான்
பழகினார்கள் என்பதை
தெரிந்துக் கொண்டேன்
என் அன்பின் தேவை
அவர்களுக்கு தேவை 
இல்லாத போது...!




141.
ஒருவரின் தேவையைப் 
பொறுத்தே உங்களுடன் 
உறவாடும் நேரம் 
நிர்ணயிக்கப்படுகிறது.
தேவைகள் குறைய குறைய
நேரங்களும் தேடல்களும் 
குறைந்து போகும்...!




142.
தான் மகிழ்ச்சி அடைவதற்காக
என்ன வேண்டும் என்றாலும்
செய்வார்கள் மனிதர்கள்
பிறரைப் பற்றி கவலைப் படாமல்...!




143.
விலங்குகளோ
பறவைகளோ
எவ்வளவு வயது
ஆனாலும் பிற
உயிர்களை சார்ந்து
வாழ்வது இல்லை...
மனிதர்கள் மட்டும்  
தனக்கு உதவவில்லை
என்றால் மட்டும்
பிறரை கோபித்துக்
கொள்கின்றனர்...!




144.
காலை மாலை 
உடலைக் 
கழுவுவதுப் போல,
சிலர் உள்ளத்தை  
கழுவுகிற முறையை
மட்டும் தினம்
மறக்கின்றனர்...!




145.
இருக்கிற இடத்தில்
இருப்பதை வைத்துக் 
கொண்டு திருப்தி 
அடைவது தான்
மகிழ்ச்சியின் ரகசியம்...!




146.
விரோதிகளையும்
வியாதிகளையும்
முளையிலேயே கிள்ளி 
எறிய வேண்டும்...!




147.
கவலையைப் பற்றி
சிந்தித்துக் 
கொண்டிருந்தால்
அது வளர்ந்து
கொண்டே இருக்கும்...!



148.
ஆயிரம் பொய்கள்
சொன்னால் கூட
ஒரு உண்மையை
மறைக்க முடியாது.
எப்படித் தான் மறைக்க 
நினைத்தாலும்
ஒரு நாள் உண்மை
வெளியே தெரிந்து விடும்....!




149.
பிறர் முதுகில் ஏறிக்கொண்டு 
செல்லும் வெற்றி எப்போதும் 
நிலைக்காது,தன் சொந்த 
காலில் நடந்து சென்று பெரும்
வெற்றியே நிலைக்கும்....!




150.
எப்பொழுதும் தனது 
வேலையில் கவனம்
செலுத்தினால் கெட்ட 
எண்ணங்கள் வராது....!




151.
நிழல்  போலத் தீமைச்
செய்பவர்களையும்
அவர்கள் செய்த தீமைச் 
செயல்களின் விளைவுகள் 
பின் தொடரும்...!




152.
பேசினாலும் 
சாகத்தான் 
போகிறோம்,
பேசாமல் 
இருந்தாலும்
சாகத்தான் 
போகிறோம்....
உரிமைக்காக
பேசிவிட்டு இறந்து 
போவோம்...!




153.
சிறிய தவறுகளுக்காக
உறவுகளை முறித்துக் 
கொள்ளாதீர்கள்...
உறவுகளை முறித்துக்
கொள்வதற்காக
உறவுகளை வளர்க்காதீர்கள்...!




154.
நான் நம்பியவர்கள்
என்னை கைவிட்டதே
அதிகம் என்பதால்
நம்பிக்கை ஒரு போதும்
என்னை கைவிட்டதில்லை
என் வாழ்கையில்...!



155.
கவலையோடு 
வாழலாம் ஆனால்
கவலைக்குள்
வாழ்ந்து விடாதே...!




156.
நம் வாழ்க்கை நமக்கானது,
பிறருக்காக வாழாதீர்கள்....
இவ்வுலகில் படைக்கப்பட்ட 
யாரும் நமக்காக இல்லை,
அவர்கள் வந்த வேலை
முடிந்ததும் அவர்களே
சென்றுவிடுவார்கள்....!




157.
எவ்வளவு வலிமை 
கொண்டவர்களாக
இருந்தாலும்
எவ்வளவு நேர்மை 
உள்ளவராக இருந்தாலும்
துரோகங்கள் 
அவர்களை எளிதில்  
வீழ்த்தி விடுகிறது
சூழ்ச்சியினால்...!




158.
நேர்மையான
அவர்களைத்
தான் இந்தச் சமூகம்
நசுக்குகிறது 
நேர்மையற்ற
அவர்களுக்காக...!




159.
மனிதன்
மனிதநேயம் 
இல்லாமல்
கொல்லத் துடிக்கும்
சாதி வெறியைத்
தூண்டும்
எண்ணங்களையும்,
சாதி என்ற 
விதைகளையும்
பிள்ளைகளின்
மனதில் 
விதைக்காதீர்கள்...!



160.
மனிதனை 
சக மனிதனாக
மதிக்கவும், 
தன்னைப்போல 
பிறரையும் நேசிக்கவும்
பிள்ளைகளிடம்
கற்றுக்கொடுங்கள்....!



161.
பணம் 
எங்கிருந்தாலும்
அதன் மதிப்பு 
ஒன்று தான் 
ஆனால் அதை
வைத்திருப்பவரின்
மதிப்பு மட்டுமே
ஏறும் இறங்கும்
வைத்திருக்கும்
அளவைப் பொறுத்து...!



162.
ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளா 
விட்டாலும் நாம்
அவர்களைப் பற்றி
தெரிந்து கொண்டு
தான் இருக்கிறோம்...!



163.
ஆறாத மனக்
காயங்கள் 
எல்லாம்
ஆறி இருக்கும் 
மீண்டும்
ஒரு முறை 
பேசியிருந்தால்...!



164.
உதிரம் கொடுத்து 
உணவளித்த பசுவும்
உழைப்பால் உயர்த்தி விட்ட காளையும்
நினைத்ததில்லை, 
ஒரு நாள் நம்மை
உதறி விட்டு 
செல்வார்கள் என்று.
(மனிதனுக்கும் பொருந்தும்)



165.
ஆசைக்கொள்
ஆனால் பேராசைக்
கொள்ளாதே,
இருப்பதையும்
இழந்து விடுவாய்...!



166.
அன்பென்ற 
விதை போட்டு
பாசமென்ற
நீரூற்றி
அரவணைப்பு
செய்து பராமரித்து
வந்தால் வாழ்வென்ற
செடி வளர்ந்து
உன் உள்ளத்தில்
காதல் என்ற
பூ மலரும்...!



167.
பணத்தின் மீது 
ஆசைக்கொண்ட
பெண்களும்
பெண்களின் மீது
ஆசைக் கொண்ட
ஆண்களும்
ஒருவரை ஒருவர்
ஏமாற்றிக் கொண்டு தான் 
சுற்றுகிறார்கள்
இந்த உலகில்....!